
தமிழக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராகப் போராட்டடம் நடத்துவதாக தெரிவித்திருந்தார்.
திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக கட்சி சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இன்று, கமல்ஹாசன், குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் ம.நீ.ம பங்கேற்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக பேரணியில் பங்கேற்க இயலாத காரணத்தை ஸ்டாலினிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விளக்கியதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
இதுகுறித்து முறையான அறிவிப்பை திமுக வெளியிடும் என ம.நீ. ம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.