- Ads -
Home உள்ளூர் செய்திகள் மகளின் தோழிக்கு தந்தை செய்த செயல்! ஆத்திரத்தில் தோழி எடுத்த முடிவு!

மகளின் தோழிக்கு தந்தை செய்த செயல்! ஆத்திரத்தில் தோழி எடுத்த முடிவு!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஏஎஸ்கே சாலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் விழுந்து இறந்துகிடந்தார்.

இதை பார்த்து அலறிய பொதுமக்கள், உடனடியாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறைக்கு தகவல் சொன்னார்கள். உடனே அங்கு விரைந்து வந்த காவலர்கள் சடலத்தை பார்வையிட்டனர்.. விசாரணையும் ஆரம்பமானது!

கொலை செய்யப்பட்டவர் பெயர் சேகர்.. வயது 59 ஆகிறது.. திருவொற்றியூரை சேர்ந்த இவர் ஒரு கற்பூர வியாபாரி..
சேகரின் மகள் அனிதாவும் திருவொற்றியூரை சேர்ந்த சுபாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நெருங்கிய தோழிகள்..

ஒன்றாக படித்தவர்கள்.. இதனால் அனிதா பார்க்க வீட்டுக்கு வரும்போதுதான், சேகர் அறிமுகமாகி உள்ளார்.

தோழியின் அப்பா என்றால் தனக்கும் அப்பா என்ற உரிமையில்தான் இளம்பெண் ஆரம்பத்தில் பழகி உள்ளார். நிறைய செல்பிகள், போட்டோக்களை ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்டுள்ளனர்..

ALSO READ:  உண்மைகளை மறைத்து வணிகர்களை போராடத் தூண்டும் வணிக சங்கங்களுக்கு கண்டனம்!

ஆனால், அந்த அப்பா எல்லை மீறிவிட்டார். அடிக்கடி வீட்டிற்கு வருவதை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

சேகரின் காம வெறிக்கு சுபா பலமுறை ஆளாகி உள்ளார்.. சுபாவின் ஆடையற்ற புகைப்படங்களை செல்போனில் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்..

அதை காட்டியே 5 வருடமாக பாலியல் அத்துமீறலிலும் சேகர் ஈடுபட்டுள்ளார்.

சுபாவுக்கு அவரது வீட்டில் கல்யாண ஏற்பாடு நடக்கவும், சேகருடன் பேசுவதை குறைக்க ஆரம்பித்தார்.. இது அப்பாவுக்கு ஆத்திரத்தை தந்தது.. கடுப்பான சேகர், “ஏன் என்கிட்ட முன்னாடி மாதிரி பேசுறது இல்லை.. பழைய மாதிரி நீ என்கூடவே பழகணும்.. பேசணும்.. இல்லேன்னா நீயும், நானும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன்” என மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ந்த சுபா.. சேகர் உயிரோடு இருக்கும்வரை தனக்கு எப்படியும் பிரச்சனை, ஆபத்துதான் என்று நினைத்து, கொலை செய்யும் முடிவுக்கு போனார்.

சேருக்கு நேற்று பிறந்த நாள்.. பரிசு தர வேண்டும் என்று சொல்லி சேகரை நேரில் வரவழைத்தார் சுபா.. அதன்படியே சொன்ன இடத்தில், சொன்ன நேரத்துக்கு வந்தார் சேகர்..
“கண்ணை மூடிக்குங்க.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர போறேன்..” என்று சுபா சொல்லவும், சேகர் கண்ணை ஆசை ஆசையாக மூடினார். அப்போது ஃபெவிகுவிக் பசையை சேகரின் வாயில் ஊற்றியதும், திடுக்கிட்டு கண்ணை திறந்தார்.. ஆனால் இமைக்கும் நேரத்தில் கத்தியால் சேகரின் கழுத்தை அறுத்தார் சுபா..

ALSO READ:  ‘ரெட் ஜெயண்ட்’ படத்தை வெளியிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

வாயில் ஃபெவிகுவிக் இருந்ததால் சத்தம் போட்டு கூட சேகரால் கத்த முடியவில்லை.. ரத்த வெள்ளத்தில் சேகர் சுருண்டுவிழ.. அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வந்துவிட்டார் சுபா.. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் இவை அனைத்துமே இருந்ததை வைத்துதான், காவல்துறையினர் சுபாவை கண்டறிந்து கைதும் செய்தனர்..

வீட்டில் மறைத்து வைத்திருந்த ரத்தம் தோய்ந்த சுடிதாரையும் கைப்பற்றினர்.. கொலை செய்யப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்தனர்.

பாலியல் தொல்லையை 5 வருடமாக விடாமல் தந்து கொண்டிருந்த தோழியின் அப்பாவை, நடுரோட்டில் நிற்க வைத்து.. வாயில் ஃபெவிகுவிக்கை ஊற்றி.. இளம்பெண் கத்தியால் அறுத்து கொன்ற சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version