
புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தில் உள்ள கோயிலாகும்.
திருவாசகம் பிறந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த மாதம் 31ஆம் தேதி திருவிழா தொடங்கியது.
இந்நிலையில் இன்று அதிகாலை மேளதாளம் முழங்க கோயிலில் உள்ள ஆத்மநாதர் யோகாம்பிகா குதிரைச்சாமி வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.
அதனை தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அதிகாலை உபதேசகாட்சி நடந்தது. இதில் ஆத்மநாதர் சுவாமிக்கு உரிய பூஜைகளை பாலசுப்ரமணிய நம்பியார் செய்தார்.
வீதி உலாவினை இறைவன் மாணிக்கவாசகருக்கு தியாகராஜ மாணிக்க குருக்கள் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை ஆதீன உத்தரவுப்படி கட்டளை தம்பிரான் திருவெண்ணெய்நல்லுார் திருச்சிற்றம்பலம் சுவாமிகள் மேலாளர் முத்துகிருஷ்ணன் மணியம் ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.