Home உள்ளூர் செய்திகள் ஊரை குப்பையாக்கும் குடிமக்களுக்கு அபராதம்! தமிழக அரசு ஆணை!

ஊரை குப்பையாக்கும் குடிமக்களுக்கு அபராதம்! தமிழக அரசு ஆணை!

சென்னை மாநகராட்சியில் மொத்தமாக இருக்கும் 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகளில் ஒரு நாளைக்கு சுமார் 5 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.

இந்த குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கொட்டப்படுகிறது. சென்னையில் 60% மக்கள் மட்டுமே தரம் பிரித்துக் கொடுக்கப்படுவதாகவும், மாநகராட்சி விதிகளைப் பின்பற்றுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குப்பைகளை முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், மக்கள் அதனைச் செயல்படுத்துவதாகத் தெரியவில்லை. அதனால், குப்பை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், குப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன் படி வீடுகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், தியேட்டர்கள், அரசு அலுவலகங்கள், தொழில் உரிமம் பெற்ற கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் கூட கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கும், குப்பையைத் தரம் பிரித்து வழங்காதவர்களுக்கும், கட்டுமான கழிவுகளைச் சட்ட பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கும் குப்பையை எரிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகள் தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில காலங்களில் மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version