செங்கோட்டை மேலூர் முகம்மது நபி சமுதாய நலக் கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாத் பெண்கள் பிரிவு ஷகிரா பானு தலைமை தாங்கினார். மைதீன் பாத்திமா, ஹாரூன் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேட்டை மீரா ஆலிமா வரவேற்புரை நிகழ்த்தினார் இ ந்திய தவ்ஹீத் ஜமாத் தலைமை ஆலிமா பரக்கத் நிஷா “குடும்பத்தில் ஆண்களின் பங்கு “என்ற தலைப்பிலும், நாதிரா ஆலிமா “மாறியது மனம் , மாற்றியது இஸ்லாம்” எனும் தலைப்பிலும், நூருன் நிஷா “சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்கு” எனும் தலைப்பிலும், பரக்கத் பதர் நிஷா “அங்கீகரிக்கப்பட்ட பண்பாடு சிதைவு” எனும் தலைப்பிலும் பெண்கள் விழிப்புணர்வு குறித்து பேசினர். இந்த மாநாட்டில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1) மது, வரதட்சணை, வட்டி போன்ற தீமைகளுக்கு எதிராக பெண்கள் சமுதாயம் பாடுபட வேண்டும். 2) திருச்சி மாணவி சுல்தானா பாலியல் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். 3) அரசு மருத்துவமனைகளில் இறந்த பெண்களை பிரேத பரிசோதனை செய்ய பெண் மருத்துவர்களையே நியமிக்க வேண்டும். 4) பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆடை ஒரு காரணமாக உள்ளது. பெண்கள் கண்ணியமாக தங்களை காத்துக் கொள்ள வேண்டும். 5) நாட்டில் தலை தூக்கி வரும் மதவாத பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 6) மத்திய அரசின் மதவாதக் கொள்கைகளை அனைத்து சமுதாய மக்களும் எதிர்த்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நபினா ஆலிமா நன்றி கூறினார்.
செங்கோட்டையில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari