நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் புனித வெள்ளி

bunitha நெல்லை மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும், இயேசுவின் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பனிமயமாதா சர்ச்சில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமப்பது போன்ற சொரூபம் சர்ச்சினை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடியில் பாதிரியார் லெரின் டீரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரு இருதய சர்ச்சில் தூத்துக்குடி பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த, ஈஸ்டர் பண்டிகை தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று நள்ளிரவு அனைத்து சர்ச்சுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கவுள்ளது.தென்காசி,செங்கோட்டை,அகரக்கட்டு.உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட்டது.