கரூரில் பலத்த சூறாவளி: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

karur1கரூர்: கரூர் பகுதியில் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளிக் காற்றினால் வீடுகளின் கூரை ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொப்பம்பட்டி, ஒண்டியூர், சங்கம்கரை, துக்காச்சி உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் நேற்று நள்ளிரவு திடீரென சூறாவளி காற்று வீசியது. இந்த பயங்கர சூறாவளிக் காற்றால் இந்த பகுதியில் சுமார் 40 வீடுகளில் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்கள் காற்றில் பறந்தன.karur2 கிராமப் பகுதியில் இருந்த மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் சில சாய்ந்ததால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்;டது. இதனால் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். “குடிசை வீடுகள் இழந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மற்ற நிவாரணங்களும், லேசாக் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2500-ம் மற்ற நிவாரணங்களும் கிடைக்கும். ஆனால், இங்கு ஓட்டு வீடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் கோரிக்கைகள் அரசுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்” என்று ஆட்சியர்ர் ஜெயந்தி அவர்களிடம் உறுதியளித்தார்.