புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு அமமுக சார்பில் கரோனா ஊரடங்கில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் சிவசண்முகம் தலைமை வகித்து 800 பேர்களுக்கு அரிசி காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மாநில வர்த்தக அணி இணை செயலாளர் பஞ்சநாதன்,வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் கார்த்திக்சேவுகப்பெருமாள் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மதன்மோகன் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ராமநாதன்,மாவட்ட வர்த்தகஅணி செயலாளர் தனபாலன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் சுகாதாரப்பணியாளர்கள் ஆட்டோ ஒட்டுனர்கள் ஆகியோர் 800 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு,,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நம்பர் 1 கருப்பையா நகர பொருளாளர் மீராமைதீன்,நகர துணை செயலாளர் கனி நகர இணை செயலாளர் அடைக்கலம் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
