அறந்தாங்கியில் திமுக சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்,அவைதலைவர் பொன்துரை,பொதுக்குழு உறுப்பினர் கலைமணி,மணமேல்குடி சேர்மன் கார்த்திகேயன் வர்த்தக அணி அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகரில் 6 இடங்களில் தலா 300 அரிசி சிப்பங்கள் வீதம் ஆயிரத்து 800 அரிசி சிப்பங்களை திமுக சார்பில் வழங்கப்பட்டது.
மணமேல்குடி ஒன்றிய சக்திராமசாமி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் பொன்கணேசன்,மணமேல்குடி ஒன்றிய துணை தலைவர் சீனியார், முன்னாள் நகர செயலாளர் ராசேந்திரன்,தீன்,கோபி,காசிநாதன்,ஆறுமுகம்,சக்தி,துளசிராமன்,கலைச்செல்வன்,வீரையா,பாரதிராஜா,உட்பட பலர் கலந்து கொண்டனர்
