அறந்தாங்கியில் நகர காங்கிரஸ் சார்பில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்என்புரம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார்.பசீர்அலி,முரளி,கூடலுார்முத்து,யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ரூ.300 மதிப்பிலான அரிசி மற்றும் காய்கறிகள் 250 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நிலையூர் சரவணன்,அம்பலவாணனேந்தல் சுப்ரமணியன்,கிருபாகரன்,பாலு,சாகுல்ஹமீது,சந்தானம்,சதாசிவம்,வடிவேல்,லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து அக்னிபஜார் பகுதியில் 250 குடும்பத்தினருக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் சேக்மைதீன்,பசீர்அலி,அனிபா,சரிபு,பீர்சேக்,கீரின்முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
