அறந்தாங்கி
அறந்தாங்கியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னி்ட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தியும் அழியாநிலை மற்றும் ஆவுடையார்கோயிலில் ஆதரவற்றோர் இல்லங்களில் திமுக இளைஞரணி சார்பில் உணவும் வழங்கப்பட்டது.
அறந்தாங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி தலைமையில் முன்னாள் எம்எல்எ உதயம் சண்முகம், நகரசெயலாளர் ஆனந்த் பொதுக்குழு உறுப்பினர் கலைமணி,அவை தலைவர் பொன்துரை ஒன்றிய செயலாளர் பொன்கணேசன், ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், கலைஞர் மன்றம் காந்திநாதன்,முன்னாள் நகர செயலாளர் ராசேந்திரன் வெள்ளைச்சாமி,வக்கீல்கார்த்திகேயன் முன்னிலையில் மலர் துாவி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அழியாநிலையில் நடந்த நிகழ்ச்சியில் முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது இதில் மாவட்ட பொருப்பாளர் ரகுபதி தலைமையில் இளைஞரணி மணிராஜன்,சிவசங்கர்,பாரதிராஜா.முன்னிலையில் வர்த்தக அணி முத்து,துளசி,ராமசாமி,விமல்,சிறுபான்மை பிரிவு நசுருதீன்,உட்படபலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அசன்முகமது ஜின்னா தலைமையில் இளைஞரணி மணிராஜன்,பாரதிராஜா,சதிஷ்குமார் முன்னிலையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினர்.இதில் நிர்வாகிகள் வக்கீல்ராமநாதன்,அவை தலைவர் பொன்துரை, கேசவன்,சேர்மன் உமாதேவி கவுன்சிலர்கள் சுந்தரபாண்டியன்,செந்தில்குமரன்,செல்வி,ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம்,தமிழ்ராசு,கைலாசம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
