நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கோவில் திருவிழா – வெடி விபத்தில் 2 பேர் பலி பலர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை சின்னனூர் நாடு பகுதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் மாவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. இதை பக்தர்கள் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக ஒரு வாண வெடி வெடித்து சிதறி கோவில் அருகில் உள்ள பழைய மோட்டார் அறையில் விழுந்தது. அங்கு ஏற்கனவே வெடிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த வெடிகளும் சேர்ந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மங்களம் பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் கதிர்வேல்(6) மற்றும்  வயல் நாடு புதுவளசு பகுதியைச் சேர்ந்நத சின்னசாமி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேய உயிர் இழந்தனர் . மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர் . படுகாயம் அடைந்த, சந்திரமோகன் செல்லத்துரை ராஜமாணிக்கம் மாரிமுத்து  ராஜீ , ஆகியோரை நாமக்கல் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றன . மேலும் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட  இந்த துயர சம்பவம்  கொல்லிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .06-04-15 Accident photos