சவுதி அரேபியாவில் இருந்து குமரி வந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த ஒரு மாதமாக சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
களியக்காவிளை சோதனை சாவடி, மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவற்றில் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதம் 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்த கணவன், மனைவி குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் வசித்து வந்தனர். விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள், அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்தனர்.
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பரிசோதனை செய்தபோது அவர்களின் 3 வயது பெண் குழந்தைக்கு கரோனா தொற்று இறுப்பது உறுதி செய்யப்பட்டது.
குழந்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு கரோனா இருந்ததால் பெற்றோர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.