தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பைச் சேர்ந்த பாஸ்கர் (28) புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்தார். இவர், பிப்.23ல் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை 24ஆம் தேதிக்கு மாஜிஸ்ட்ரேட் சங்கர் ஒத்தி வைத்தார். பின்னர் சுரேஷ் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுரேஷ் ஆஜர் படுத்தப் படுவதையறிந்த அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் வீட்டில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மார்ச்.17 இன்று சுரேஷ் என்பவர் பெரம்பத்தூரில் உள்ள அவரது வீட்டின் முன்னர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டை சோதனையிட்டதில், ஒரு ரிவால்வர், ஆறு 0.38 தோட்டாக்கள், 7 அரிவாள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதை அடுத்து சுரேஷ் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறினர்
ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் கொலையில் கைதான சுரேஷ் வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari