சென்னை:
ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, இன்று இரு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஊழலுக்கு எதிரான போரை நடத்துவதாக சுதந்திர தினத்தில் வீர உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் தமிழகத்தில் ஊழல் அணிகள் ஆட்சிப் பொறுப்பில் அமர உறுதுணையாக இருந்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் 19 எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாமல் கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. முன்பு, 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஓபிஎஸ் கடிதம் அளித்த போதே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எனவே தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் திமுக உரிய முடிவை எடுக்கும் என்று கூறினார் ஸ்டாலின்.