நெல்லை: நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அடுத்த மைபாறையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65), இவரது மனைவி தனலட்சுமி (55), தனலட்சுமியின் தம்பி முத்தாள்வார். இவருக்கும் சகோதரி தனலக்ஷ்மியின் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பான முன் பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் சகோதரி கணவனிடம் இதுக் குறித்து முத்தாள்வார் தகராறு செய்துள்ளார். தகாராறு முற்றியதில் முத்தாள்வார் சகோதரியையும்,அவரது கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார். உயிருக்கு போராடி சிறிது நேரத்திலேயே ரத்தவெள்ளத்தில் ஜெயராமன், தனலட்சுமி இருவரும் இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேங்கடம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொத்துத் தகராறில் இரட்டைக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari