தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீட்டிற்கு, டிடிவி தினகரன், விருத்தாசலம் வழியாக இன்று காலை அரியலூர் செல்கிறார்.
அவர் விருத்தாசலத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக தகவல்
பரவியது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள் மாஜி சேர்மன் அருளழகன் தலைமையில் எம்ஜிஆர் சிலையை பராமரிப்பு செய்யப்போவதாக கூறி துணியால் மூடினர். பின்னர் அந்த பீடத்தை சுற்றி கீற்றுகளால் தடுப்பு அமைத்து மூடினர்.
இதனால் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.