புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு செய்தார்
தமிழகத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான கோட்டைப்பட்டிணம் கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்து விசைப்படகுகளை பாதுகாத்தல் குறித்தும் பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் தெரிவித்து கடலுக்கு செல்லவேண்டாம் என்று அரசின் உத்தரவினை தெரிவித்தார்.
அப்போது அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மீன்வளத்துறை இணை இயக்குநர் சர்மிளா உதவி இயக்குநர் குமரேசன் தாசில்தார் ஜமுனா டிஎஸ்பி சிவராமன் அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடலோர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துகண்ணு ஆகியோர் உடனிருந்தனர்
