புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கோயிலில் பாலசுப்ரமணிய நம்பியார் தலைமையில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 திரி எடுத்து அதை பசும் நெய்யில் ஊறவைத்து அதை 9 வீதம் 3 பிரித்து கட்டி ஒரு கம்பில் கட்டி அதை ஆத்மநாதர் அருகில் உள்ள தீபத்தில் ஏற்றி அவருக்கு காண்பித்து பின்னர் உள்பிரகாரத்தை வலம் வரும் அக்னி அபிஷேகம் என்று பெயர்.இதை பாலசுப்ரமணிய நம்பியார் தலைமையில் நம்பியார்கள் செய்தனர்.மாணிக்கவாசகருக்கு தியாகராஜகுருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்தனர்.ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சுப்ரமணியன் செய்தார்.
