ஆவுடையார்கோயிலில் வீரபத்திரர்களுக்கு சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடந்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது

இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு 24வதுகுரு மகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கோயில் உள்ள ஆத்மநாதர்,யோகாம்பிகா மாணிக்கவாசகர் குதிரைச்சாமி குருந்தமூலத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது

அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு பாலசுப்ரமணிய நம்பியாரும் மாணிக்கவாசகருக்கு தியாகராஜகுருக்களும் செய்தனர்.

தொடர்ந்து சங்குஅபிஷேகமும் நடந்தது அதனை தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனகாப்பு வழிபாடு நடந்தது மூலவர் அருகில் உள்ள வீரபத்திரர் முன்மண்டபத்தில் உள்ள அகோரவீரபத்திரர் ரண வீரபத்திரருக்கு சந்தனகாப்பு சாற்றி தீபாரதனை நடந்தது இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
