
சென்னை புரசைவக்கம், சரவணா ஸ்டோர்ஸ் அருகே இருக்கும் டெக்கான் என்ற பிரபல தனியார் உணவகத்தில் அப்பாஸ் என்ற இளைஞர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் பல்லி இருந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அப்பாஸ் கூறியது,
”ஒரு வேளை விஷயமாக புரசைவாக்கம் சென்றேன். மதியம் ஒரு மணி போல, அப்போது சரவணா ஸ்டோர்ஸ் அருகிலிருக்கும் பிரபல ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன்.
மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டேன். பாதி சாப்பிட்டு, கடைசி கொஞ்சம் இருக்கும் போது, பிரியாணியில் பல்லி இருந்தது.

பிரியாணியோடு கலந்திருந்ததால், தட்டில் தெரியவில்லை. மட்டன் பிரியாணி பிரியாணியைக் கையில் எடுத்தபோதுதான் பல்லி தெரிந்தது. மசாலாவோடு கலந்து, வெந்து போய் இருந்தது பல்லி.
இதுகுறித்து பில்லிங் செக்ஷனில் தகவல் தெரிவித்த போது, அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததோடு, சர்வரை அழைத்து, இதையெல்லாம் பார்க்கமாட்டாயா? தூக்கிப்போட மாட்டாயா என்று சர்வரை திட்டியது தான் மிகப் பெரிய கொடுமை.
அதைவிடக் கொடுமை, மருத்துவமனை அருகில்தான் இருக்கிறது. வேண்டுமென்றால் நீங்கள் அங்கு சென்று பாருங்கள் என்று சொன்னதுமதான்.
மன்னிப்பு கூட கேட்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. மனிதாபிமானம் கூடவா இல்லை. தொடர்ந்து வயிறு வலித்ததால் நானே வந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளித்தார்கள்.
மருந்து மாத்திரை, ஊசி எல்லாம் கொடுத்தார்கள். ஆனாலும் இன்னும் வயிறு வலி நிற்கவில்லை. என் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் அந்த ஹோட்டல் தான் பொறுப்பு. அந்த ஹோட்டல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மட்டன் பிரியாணியில் பல்லி கிடந்தது உண்மை தான் என்றும் நானே அதனை பார்த்தேன் என்றும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகிறது.
அதில் ஒருவர் சாப்பாட்டில் எப்படி பல்லி வந்தது என்று கேள்வியெழுப்ப, அதற்கு அந்த ஊழியர் அதான் சார் தெரியல.உணவகத்தில் சிலீங் எல்லாம் எப்பவும் சுத்தம் செய்துதான் வைத்து உள்ளோம்.

சில நாட்களுக்கு முன்பு கூட அதிகாரிகள் சோதனை செய்து சென்றனர் என்று கூறிகிறார். மேலும் உணவில் பல்லி இருப்பதை அவர் காட்டும் போது தான் எங்களுக்கே தெரிந்தது என்றும் நான் பல்லி இறந்த நிலையில் பிரியாணியில் இருந்ததை பார்த்தேன் என்றும் சொல்லுகிறார்.
தற்சமயம் ஹோட்டல் ஊழியர் பேசியுள்ள இந்த வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.