

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம்மில் பணம் இல்லாததால் அப்படியே விட்டு சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் இல் நள்ளிரவில் கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். கடப்பாரை கம்பி போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது ஏடிஎம்மில் அறையில் உள்ள அலாரம் ஒலித்ததை அடுத்து கொள்ளையர்கள் பதட்டம் அடைந்துள்ளனர் .
மேலும் ஏடிஎம் மிஷினில் பணம் இல்லை என தெரிந்தவுடன் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் பயன்படுத்திய கடப்பாறை கம்பி போன்றவற்றை அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். சிசிடிவி கேமரா மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.