
ஸ்டாலின் குடும்பம் இந்துக்களுக்கு விரோதமான குடும்பம் இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம் திமுக அரசாங்கம் என இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று ஆண்டாள் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்து ஆறாவது நாள் ஆன நிலையில் உடலை பெற மறுத்து இருக்கிறார்கள் ஒரு பிரச்சனையை தீர்க்க மாநில அரசு நிர்வாகம் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது.ஸ்டாலின் அரசாங்கம் கையாலாகாத அரசாங்கம். இந்த அரசாங்கத்தின் எந்த செயல்பாடும் இல்லை என்பது இந்த ஒரு சம்பவமே உதாரணம்.
மணப்பாறையில் தந்தை தோண்டிய ஆழ்துளை கிணற்றில் மகன் விழுந்து உயிரிழந்தான். 20 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு ஓடிய ஸ்டாலினுடன் அவரது மகன் சின்னவர்,கனிமொழி சென்றார்கள்,சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்திற்க்கும் சென்றார்கள் அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் தான் சென்றீர்கள்.சின்னசேலத்தில் பள்ளி மாணவி சம்பவம் இந்துகள் என்பதால் இவர்கள் செல்ல வில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் குடும்பம் இந்துக்களுக்கு விரோதமான குடும்பம். இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம் திமுக அரசாங்கம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.இந்துக்கள் என்றால் தமிழ்நாட்டில் சாகப் பிறந்தவர்களா? ஸ்டாலின் அரசாங்கம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது.
நான்கு நாட்கள் கழித்து ஐந்து நாட்கள் பள்ளி வாகனங்கள் சூரையாடப்பட்டிருக்கிறது. இது காவல்துறையின் முகத்தில் மக்கள் எச்சில் துப்புவது போன்று நினைக்கவில்லையா டிஜிபி. கலவரத்தை தடுக்க ஏன் துப்பு இல்லை காவல்துறைக்கு.டிஜிபிக்கு சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுத்து போடுவதற்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
டிஜிபியை செயல்படவிடாமல் முதலமைச்சரின் செக்கரட்டரி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக நிர்வாகம் இறந்து போய்விட்டது.இதை முதலமைச்சர் விசாரணை செய்து தெளிவுபடுத்த வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் வானங்கள் நொறுக்குவதற்கு நீங்கள் ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கலவரத்தை பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு பார்த்துக் கொண்டிருந்தீர்களா ?சிசிடிவி காட்சிகளை வைத்து ஏன் கைது செய்யவில்லை?.
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை? மாணவர்கள் இயக்கம் காரணமா, ஜாதி அமைப்பினர் காரணமா, அல்லது ரவுடிகளின் கூட்டம் காரணமா என்று சொல்ல வேண்டுமா இல்லையா டிஜிபி..
ஸ்டாலின் வீட்டுக்குள்ளேயே யார் எதற்கு அதிகாரம் செய்கிறார்கள் தமிழகத்தில் சந்திரபாபு நாயுடு உருவாகுவாரா என்ற பயம் இருக்கிறது என்கிறார்கள்.இந்தக் கலவரம் நடந்திருக்கு குழப்பம் தான் காரணம் இதை முதல்வர் தெளிவு படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.