விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வங்கி கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கியில்
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது ஆனால் லாக்கர் அறையை துளையிட முடியாததால் கொள்ளையர்கள் முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றனர் இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
இந்நிலையில் ராமலிங்கா பஞ்சாலை அருகே தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகப்படும்படியான வகையில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த செம்பட்டியை சேர்ந்த
பழனிசாமி(27) , அடைக்கலம்(30),
கண்ணன்(31) ,
சிவசக்தி(23) ,
மணிகண்டன்(26) ஆகிய 5 இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் வாழ்வாங்கி வங்கிக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தேடப்பட்டு வரும் கொள்ளையர்கள் என தெரியவந்தது மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணை நடத்தினர்.இதில் பெத்தம்மாள் நகர், ராஜீவ் நகர், தேவாடெக்ஸ் காலணி உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து கொள்ளையில் ஈடுபட்டதும் வாழ்வாங்கி கல்குவாரியில் ரூ 2,40,000 பணத்தையும் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது கைது செய்யப்பட்ட இந்த கொள்ளையர்கள் மீது நகர் காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் பந்தல்குடி காவல் நிலையம் என மூன்று காவல் நிலையங்களில் 7 கொள்ளை வழக்குகள் நிலுவையில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளில் மணிகண்டன் என்பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது கைது செய்யப்பட்ட பொறியியல் பட்டதாரியான மணிகண்டன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். இதில் மணிகண்டன் என்பவர் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் இருப்பதற்காக ஆன்லைனில் சில பொருட்கள் வாங்க முயற்சித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு போலீசார் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.