சென்னையில் வசித்து வந்த 28 வயது வாலிபர் போதை பொருள் கிடைக்காமல் தூக்கிவிட்டு தற்கொலை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்
பச்சைமடம் திருவனந்தபுரம் தெருவே சேர்ந்த நிர்மல் குமார் மகன் கார்த்திகேயன் வயது 28 சென்னை அம்பேத்கர் நகர் அரும்பாக்கத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார் .
இவர் சென்னையில் போதை அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நிர்மல் குமார் மற்றும் அவரது மனைவி தனது மகன் கார்த்திகேயனை இராஜபாளையத்துக்கு அழைத்து வந்து போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அறிவுறுத்தி உள்ளனர் கஞ்சா கிடைக்காத நிலையில் மது அருந்தி வந்துள்ளார் வீட்டில் இருந்த புதிய சைக்கிளை விற்று மதுபானங்கள் வாங்கி அருந்தி வந்துள்ளார் இந்த நிலையில் போதைக்கு அடிமையாக இருந்த கார்த்திகேயனை திருத்துவதற்காக வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளனர் .
போதை பொருள் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த கார்த்திகேயன் தாயின் சேலை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் இதையடுத்து இன்று காலை இராஜபாளையம் தெற்கு காவல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துள்ளனர் .
வாலிபர் தற்கொலை செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
