விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வேனில் கடத்துச் செல்லப்பட்ட 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தினர். வேலை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடினார்.
அந்த வேனை போலீசார் சோதனை இட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது. அதையடுத்து வானில் கடத்திச் செல்லப்பட்ட1.2 டன் ரேஷன் அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வேன் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
