ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செண்பகம் தோப்பில் குலதெய்வம் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து குலதெய்வம் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார்.
வெள்ளிக்கிழமை காலை தனது தம்பி ராஜா, மகன் பிரதீப், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து யானைக்கு காய்கனி வழங்கிய விட்டு ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனது குடும்பத்தினர் பேரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குடும்பத்தினருடன் வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம் தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் குலதெய்வம் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.