விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தூக்கிட்டுத்தற்கொலை செய்துதொண்டார்.இதுகுறித்து திங்கள்கிழமை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே கருப்பையாத்தேவர் தெருவில் வசிப்பவர் முருகன் (55).இவருக்குத் திருமணமாகி சசிகலா(49) எனும் மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.முருகன் அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியில் தலைமை அஞ்சல் அதிகாரியாகப் பணியில் இருந்து வந்தார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிவரையிலும் அவர் தனது குடும்பத்தாருடன் இயல்புநிலையில்தான் பேசிக்கொண்டிருந்தாராம்.மேலும் அவர் அவ்வீட்டில் ஒரு தனியறையில்தான் தூங்குவது உண்டாம்.இதன்படி வழக்கம்போல இரவு உணவு உண்டுவிட்டு அவர் தனது அறைக்கு உறங்கச்சென்றாராம்.
பின்னர் இன்று திங்கள்கிழமை காலையில் வெகுநேரம்வரை அவர் அறைக்கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தார் அக்கம்பக்கத்தார் உதவியுடன்,கதவை உடைத்துத்திறந்தனராம்.அப்போது முருகன் தூக்கிட்டுத்தொங்கிய நிலையில் இறந்திருந்தாராம்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம்.
முதற்கட்டவிசாரணையில் முருகனுக்கு அதிக கடன் தொல்லை இருந்ததும் அதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.இதுதொடர்பாக வழக்குபதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர்,முருகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தற்கொலை ..
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari