More

    To Read it in other Indian languages…

    ராஜபாளையத்தில் சாலை மறியல் ஈடுபட்ட மழை குறவர்-போலீசார் தடியடி கடைகள் அடைப்பு பதட்டம்.‌

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி மதுரை சாலையில் வன வேங்கை கட்சியைச் சேர்ந்த மலை குறவர் இன மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். கடைகள் அடைக்கப்பட்டது. பதட்டம் நிலவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடந்த 8 நாட்களாக வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியில் மத்திய அரசு அறிவித்துள்ள எஸ்.டி. பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர் மக்களை தங்களுடன் சேர்த்து குறவர் இனம் என அழைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வந்தனர்‌‌.

    போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார் அதை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர் .

    இதில் போலீசாருக்கும் பொது மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது எடுத்து போலீசார் தடியடி நடத்தினர் போலீசார் மீது கல் மற்றும் ஆண்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் அடைக்கப்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவியது 60க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் இதனால் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    two + one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,646FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-
    Exit mobile version