முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் 4,500 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர் அருகே உள்ளது பொட்டல்பட்டி விளக்கு அதன் அருகே உள்ள கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் வயசு 34 அதே பகுதியைச் சேர்ந்தவர் மாய கண்ணன்
இந்த மாய கண்ணனுக்கும் மணிமாறனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கடந்த 2018 ஆண்டு மாய கண்ணன் வீட்டுக்கு மணிமாறன் சென்றுள்ளார்
வீட்டில் மாயக்கண்ணன் இல்லை அப்போது வீட்டில் இருந்த மாய கண்ணனின் மனைவியையும் மாயக்கண்ணனின் தாயாரையும் அறிவாளால் வெட்டி தாக்கியுள்ளார்
மேலும் மாய கண்ணனின் தாயாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார் இது தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் விருதுநகர் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்
மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் மணிமாறனுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் 4,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்