விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தக கண்காட்சி என்பது 17-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் திலகபாமா.
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் யாருக்கும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்,
நிகழ்ச்சியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர்களை மட்டும் மற்றும் திரைப்படத் துறையினர் முன்னிலைப்படுத்தி உள்ளதாகவும்,
பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி புத்தக கண்காட்சிக்காக வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த புத்தக கண்காட்சியில் கலைஞர்கள் அழைக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.