சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தின் மீது பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பராசக்தி காலணியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தற்பொழுது கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சிறு வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது பட்டாசு வெடித்துள்ளனர் அப்பொழுது ஏற்பட்ட தீப்பொறி கோவிலின் ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து உள்ளது இதில் ஏற்பட்ட தீ பொறி காரணமாக தீ மல மல என பிடித்து எறிய தொடங்கியது உடனடியாக இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ மேலும் இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.