சிவகாசி அருகே பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபரை குண்டாசில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
சிவகாசி அருகேயுள்ள
திருத்தங்கல் ஆலாவூரணியை பகுதியை சேர்ந்த ஜெயமுனியசாமி என்பவர் மகன் கார்த்திக் (30). இவர் மீது திருத்தங்கல், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் கொலை, மற்றும் கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல வழக்குகள் நிலுவையிலும் உள்ளது.
இந்நிலையில் இவர் மேலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாக காவல்நிலையங்களுக்கு புகார்கள் வந்த நிலையில் கார்த்திக்கின் மீது உரிய நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க விருதுநகர் மாவட்ட எஸ்.பி., மனோகர் அளித்த பரிந்துரையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, கார்த்திக் மது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கார்த்திக் குண்டர் தடுப்பு காவல் சட்ட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.