விருதுநகரில் சொத்து வரி செலுத்தாத இரு தனியார் கடைகளை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ளது தர்காஸ் தெரு. இங்குள்ள இரு கடைகளுக்கும், புல்லலக்கோட்டை சாலையில் உள்ள ஒர கடைக்கும் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தப்படவில்லை. 3 கடைகளுக்கும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தவில்லையாம். இந்தநிலையில், நகராட்சி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளர், வரித்தண்டலர்கள் ஆகியோர் தர்காஸ் தெருவில் உள்ள இரு கடைகளுக்கும் சீல் வைத்தனர். பின்பு, ஒரு கடைக்கு வரி செலுத்தியதால் அக்கடைக்கு சீல் வைக்கவில்லை.
