விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி ஐஏஎஸ் இராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் சம்பந்தமான ஆய்விற்கு வந்திருந்தார்.
உடன் தலைமை செயல் பொறியாளர் டாக்டர் ஆர் முருகேசன் வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்ட ராமன் வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியர் நேர்மறை உதவியாளர் சங்கரநாராயணன் வேளாண்மை துணை இயக்குநர் விதை சான்று துறை வனஜா கண்காணிப்பு பொறியாளர் ஜாகிர் உசேன் செயற்பொறியாளர் டெனிஸ்டன் வைத்தியலிங்கம் வேளாண்மை உதவி இயக்குநர் இராஜபாளையம் திருமலைச்சாமி வேளாண்மை உதவி இயக்குநர் விதை சான்று சுப்பராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை கூட்டுறவுத்துறை ஆகிய துறையில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வில் இராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் 2023-23 கீழ் சோழபுரம் கிராம பஞ்சாயத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தரிசனத் தொகுப்பு அமைக்கப்பட்டு அதிலுள்ள முட்களையாக அகற்றப்பட்டு அப்பகுதியை சாகுபடிக்கு கொண்டுவரப்படதை.ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளை சந்தித்து திட்டத்தை குறித்து கலந்துரையாடல் செய்தார்
மேலும் அவர் கூறிய செய்து குறிப்பில் இத்திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு தலா ரெண்டு விதம் 600 தென்னங்கன்றுகளும், 35 விவசாயிகளுக்கு உயிர் உரங்களும் முழு மானியம் ஆகவும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு 9 விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது எனவும், தரிசு நில தொகுப்பு விவசாயிகள் குழு அமைத்து பதிவு செய்து அதற்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து மின் வசதிகளை ஏற்படுத்தி தரப்படுகிறது பின்பு பின்பு அப்பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகள் எலுமிச்சை,மா, சீத்தா, கொய்யா, நெல்லி போன்ற பழ மர பல்லாண்டு பயிர்கள் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தோட்டக்கலைத் துறை மூலமாக கிராமங்களுக்கு எட்டு காய்கறிகளை கொண்ட விதை பொட்டலங்கள் , ஐந்து பழ மரக்கன்றுகள் மரக்கன்றுகளும் 75% மானியத்திலும் காளான் வளர்ப்புக்கு மானியமும் வழங்கப்படுகின்றன இராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 12 கிராம பஞ்சாயத்துகளுக்கும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
என உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார் .
மேலும் இதற்கான ஏற்பாட்டை முன்னோடி விவசாய திருநாவுக்கரசு மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் தனலட்சுமி சேக் ஒலியுல்லா மற்றும் இதர அலுவலர்கள் செய்திருந்தனர்.