
ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு பகுதியில் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள 11 அறைகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இங்கு வழக்கம் போல் இன்று 96 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இங்கு பணியாற்றும் ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்த முத்துவேலம்மாள்(55), சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த முத்து லட்சுமி(54) ஆகியோர் பிற்பகலில் பிஜிலி வெடி தயாரிப்பதற்கு வெடிமருந்து எடுப்பதற்காக காலி பெட்டிகளை தள்ளுவண்டியில் ஏற்றி கொண்டு சென்றனர். அப்போது காலி பெட்டிகள் சரிந்து விழுந்ததில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த முத்துவேலம்மாள்(55) சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், சிவகாசி தாசில்தார் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் DSP சபரிநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவ குறித்து மல்லி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்