
சிவகாசி அருகே திருமணமான 3 மதமான இளைஞர் கத்தியால் குத்தி கொலை….உடல் குறைபாட்டை கிண்டல் செய்ததால் கொலை செய்ததாக கொலை செய்வர் வாக்குமூலம்….
சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது. அதே ஊரை சேர்ந்த தனது நண்பரான முத்துராஜ் (வயது 38) என்பவருடன் மணிகண்டன் மது அருந்தியுள்ளார்.
அப்போது
மாற்றுத்திறன் கொண்ட முத்துராஜின் உடல் குறைபாட்டை மணிகண்டன் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மாரனேரி காவல் நிலைய போலீசார் கொலை செய்த முத்துராஜை கைது செய்து நடத்திய விசாரணையில் தனது உடல் ஊனத்தை கிராமத்தில் பலரும் கிண்டல் செய்து வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் மணிகண்டனும் தன்னை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருமணமான 3 மாதத்தில் தனது நண்பரால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.