
திருவில்லிபுத்தூரில் இன்று முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது கூனங்களும் புதுத்தெரு அந்த பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து( 60) முதியவரான இவர் அவ்வப்போது பூ கட்டுவதும், கிடைத்த வேலையை செய்வதுமாக இருந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கோகுல் என்ற சிந்து(30), பேச்சிமுத்து (42) பேச்சிமுத்துவின் அண்ணன் மகன் கோகுல் இந்த இருவரும் அதிகாலை சுமார் 6.30 மணி அளவில் கூனங்குளம் புதுத்தெரு பகுதியில் வைத்து முதியவரான மாரிமுத்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.இதில் முதியவரான மாரிமுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது பற்றி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற நகர் போலீசார் இறந்த மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாரிமுத்துவை தாக்கி கொலை செய்த கோகுல் என்ற சிந்துவையும் பேச்சு முத்துவையும் கைது செய்து நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மற்றும் கோகுல் என்ற சிந்து, பேச்சிமுத்து அனைவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .எப்போதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கூனங்களும் புதுத்தெரு பகுதியில் வைத்து முதியவரை தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதற்கிடையே பேச்சிமுத்தும் கோகுல் என்ற சிந்துவும் எதற்காக மாரிமுத்துவை தாக்கி கொலை செய்தனர் என்பது குறித்து நகர் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.