திருவண்ணாமலையில் சீருடைப் பணியாளர் தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிலரே ஹெல்மெட் அணிந்து வந்திருந்தனர்.
ஹெல்மெட் அணியாமல் வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை கூறி அவர்களிடம் அபராதம் வசூலீக்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காவலர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.