சென்னை: குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் கமல்ஹாசன்.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரை இன்று காலை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன்.
சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நிஷா உள்ளிட்ட 16 பேர் இந்தத் தீவிபத்தில் உயிரிழந்தனர். சென்னை ராஜகீழ்ப்பாக்கத்துக்கு இன்று காலை சென்ற கமல்ஹாசன் அனுவித்யாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், ஒரு வாரமாக இந்தக் காட்டுத் தீ எரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவந்த நிலையில் முன்கூட்டியே எச்சரித்து இந்த அவர்களைத் தடுத்திருக்கலாம். இந்த விபத்தை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். இனி எதிர்காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மலையேற்றம் செல்லலாம் என்று கூறினார்.