விஸ்வ ஹிந்து பரிஷத்தின் “ராமராஜ்ஜிய ரத யாத்திரை” கடந்த மாதம் 13-ந் தேதி அயோத்தியில், உத்தரப்பிரதேச முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியே ரதயாத்திரையாக வந்தது.
இந்த ரத யாத்திரைக்கு தமிழகம் கேரளா எல்லையில் உள்ள கோட்டைவாசல் பகுதியில் இன்று காலையில் பாஜக, இந்துமுன்னணி சார்பில் மேளம் தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் இந்த ரதம் புளியரைவந்த போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று வரவேற்பு அளித்தனர். பின்னர் இந்த ரதம் செங்கோட்டை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலை வந்தடைந்தது. தென்காசியில் வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்று ரதத்தை மலர் தூவி வரவேற்றனர்.