― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது?

ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது?

- Advertisement -

மார்ச் 20  அன்று தமிழகத்தினுள் நுழைந்த ராமராஜ்ய ரத யாத்திரை, மதுரை வந்து, இன்று காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்று, நாலை நெல்லைக்கு வரவுள்ளது.

இந்த ரத யாத்திரையின் போது, தேவையற்ற வீண் பிரச்னைகளை தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் கிளப்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை மாவட்டம் முழுதும் நான்கு நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப் பட்டது. இவ்வளவு பரபரப்பைக் கிளப்பும் அளவுக்கு இந்த ரத யாத்திரையில் அப்படி என்ன சிறப்பு?

முதலில் இந்த ரத யாத்திரையை யார் நடத்துவது, என்ன பின்னணி என்பதைத் தெரிந்து கொள்வோம்.

உலகம் ஒரு குடும்பம் என்று தொடங்கும் இந்த ராம்தாசா மிஷனின் ராமராஜ்ய ரத யாத்திரைக்கான அழைப்பிதழில் இவ்வாறு விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீராமராஜ்ய ரத யாத்ரா 1991ல் ஜகத்குரு ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி மகாராஜால் தொடங்கப்பட்டது. அவர் ஸ்ரீராமதாச மிஷன் மற்றும் ராம ஜன்மபூமி நியாஸ் மன்ச் மற்றும் கேந்த்ரிய மார்க்கதர்ஷக் மண்டல் ஆகியவற்றின் நிறுவுனர். இவர் 2006ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலஙக்ளில் கடந்த 27 ஆண்டுகளாக ராம ரத யாத்திரை நடந்து வருகிறது. இப்போது, 2018 ஆம் ஆண்டில் அயோத்யாவில் இருந்து ராமேஸ்வரம் வரை அதன் பரப்பு விரிவாக்கப்பட வேண்டும். இது 6000 க்கும் அதிகமான கி.மீ. 41 நாட்களுக்கு ஆறு மாநிலங்கள் ராமேஸ்வரம் வரை மற்றும் கன்னியாகுமரிக்கு அருகில் ஸ்ரீராம தாச ஆஸ்ரமத்தில் முடிவடையும். ஐந்து ஜோதிர் லிங்கங்கள் 36 தீர்த்த க்ஷேத்திரங்கள் பல மஹாசமுத்திரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளடங்கும். ஒவ்வொரு நாளும் ரத யாத்திரை ஒரு ஷோபா யாத்ராவில் முடிவடையும். பின்னர் ராம ராஜ்ய மஹாசம்மேளன் பொது சேகரித்தல்…

ஸ்ரீ ராம ரதம் ஒரு நகரும் கோவில். ஸ்ரீராம ஜன்ம பூமியில் கட்டப்பட்ட ஸ்ரீராம கோவிலின் மாதிரியின் அடிப்படையில் இது கட்டப்படும். இது ஸ்ரீ ராம சீதா ஆஞ்சநேய விக்ரஹம் நந்திகிராமில் வந்த ராமரின் காலடிகள், ஸ்ரீ லங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீதா சூடாமணி, ராமேஸ்வரத்தில் இருந்து துவஜ்ஜம் மற்றும் கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலில் அகண்ட ஜோதி

இந்து மத அமைப்புகளின் தலைசிறந்த நற்பண்புகள் உட்பட தலைவர்கள், சன்யாசிகள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் பொதுமக்களிடம் உரையாடுவார்கள்..

ராமராஜ்ய ரத யாத்திரையின் ஐந்து பிரதான குறிக்கோள்கள்

1. ராம ராஜ்யத்தை மீண்டும் அமைத்தல்
2. ராம ஜன்ம பூமி ராமர்கோயிலின் கட்டுமானம்
3. கல்வி பாடத்திட்டத்தில் ராமாணம் உட்படுத்தல்
4. தேசிய வாராந்திர விடுமுறை தினமாக வியாழக்கிழமை அறிவிக்கக் கோரிக்கை
5. உலக இந்து தினத்தை அறிவிக்க கோரிக்கை..

இந்த ஐந்து நோக்கங்கள் திட்டத்தில் ஐயாயிரம் சன்யாசிகள் மற்றும் பொதுமக்கள் கையொப்பங்களை பெற்று, ரத யாத்ராவின் முடிவில் இந்தியாவின் பிரதமர் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எங்கள் ஐந்து நோக்கங்களுக்கு பொது ஆதரவைப் பெற கால் கம்பெய்ன் பயன்படுத்தப்படும்

சுவாமி கிருஷ்ணானந்தா சரஸ்வதி மற்றும் தேசிய பொதுச் செயலாளர் ஸ்ரீ சக்தி சாந்தானந்தா மகரிஷி ஆகியோரின் தலைமையின் கீழ் ஸ்ரீ ராமதாசா மிஷன் யுனிவர்சல் சமுதாயத்தால் ராமராஜ்ய ரத யாத்ரா நடட்தப்படும். இது அனைத்து இந்து அமைப்புகளுடன் தொடர்பு உடையது. பிப்ரவரி 13 ஞாயிற்றுக்கிழமை அயோத்யா கார்சேவக்புரத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்ராவை திறந்து வைப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்ஜி ஒப்புக் கொண்டார்.

இந்த வரலாற்று புரட்சிகரமான மற்றும் தார்மிக முயற்சிகளுடன் மனதில் அன்பாலும் பணத்தினாலும் நீங்கள் தொடர்பு படுத்த முடியுமானால், ராம ராஜ்யரத யாத்ராவின் வெற்றிகரமான முடிவிற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் தயவு செய்தால் நன்றியுடன் இருப்போம்.
நன்றி
ஸ்ரீராமரின் தாமரை பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

ஓ ஹிந்துஸ்! சாதி மற்றும் அரசியலுக்கு அப்பால் எழுந்திருங்கள்
ஜகத்குரு சுவாமி சத்யானந்த சரஸ்வதி…

இப்படி அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அழைப்பிதழில், இந்த அமைப்பானது அனைத்து இந்து இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று ஒரு வாசகம் உள்ளதே தவிர, இதில் எங்குமே விஎச்பி என்றோ, ஆர்.எஸ்.எஸ்., பாஜக., என்றோ பெயர் குறிப்பிடப் படவில்லை. மேலும், இது விஎச்பி., பின்னணியிலும் இயங்கவில்லை.

ஆனால் ஆன்மிக இயக்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, வி.எச்.பி., இந்த ரத யாத்திரையை வரவேற்பு அளிப்பதாக அறிவித்தது. இது, இறைவனின் திருவீதி உலா வந்தால், மரியாதை அளித்து எதிர்கொண்டு அழைப்பது போன்றது. இதனை ஒட்டியே போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது. அதிலும் கூட விஎச்பி நடத்தும் ரத யாத்திரை என்று எங்குமே அவர்களும் போட்டுக் கொள்ளவில்லை.

இதைத்தான், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தெளிவாகச் சொன்னார்கள். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் வழக்கமான ரத யாத்திரை. இதன் பின்னணியில் விசுவ இந்து பரிசத்தோ ஆரெஸ்ஸெஸ்ஸோ இல்லை என்று சொன்னார்கள். ஆனால், ஊடகங்களில் மீண்டும் மீண்டும் இதனை விசுவ ஹிந்து பரிசத்தின் ரத யாத்திரை என்றே உள்நோக்கத்துடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஆள்பலமோ, கருத்து பலமோ இல்லாத, சாதாரண நோஞ்சான் சன்யாசிகளிடம் போய், வீரத்தைக் காட்ட முயற்சி செய்தார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள்.

பல ஆண்டுகளாக, வருடந்தோறும் இயங்கி வந்த இந்த ரத யாத்திரைக்கு, இந்த வருடம் தான், மிகப் பெரும் விளம்பரம், தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் கிடைத்திருக்கிறது. இது இந்த ரத யாத்திரை நடத்தும் ஒரு மிகச் சிறிய ஆன்மிக அமைப்புக்கு மிகப் பெரும் விளம்பரம் மட்டுமல்ல, அவர்களின் குறிக்கோள்கள் இன்று மூலை முடுக்கெல்லாம் பரவும் வழியும் செய்யப் பட்டுவிட்டது. இதற்காக, அந்த ஆன்மிக அமைப்பினரான ராமதாச மிஷன் தமிழகத்துக்கும் தமிழக அரசியல் வாதிகளுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version