ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா விசாரணை ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இல்லை. ஆங்கில நாளிதழில் வந்த தகவல்கள் பெரும்பான்மை தவறானவை.
ஜெ.வை ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர், நிலோபர் கபில் தரப்பினர் பார்த்ததாக கூறப்படுவதும் தவறான தகவல். சசிகலா தரப்பை நியாயப்படுத்தும் வகையில் ஆங்கில நாளிதழுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கால கட்டங்களில் ஜெ.,வுக்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்பதும் தவறான தகவல் . இவ்வாறு விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது