பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக பணியாற்றிவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார்.
அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் இதன் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செயப்பட்டார்
கைது செய்யப்பட்டிருந்த ஆசிரியர் அந்தோணிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அருண்சக்திக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.