சென்னை: தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, மார்ச் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது.
அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அதன் சாதனை விழாவில் சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், புகைப்படத் தொகுப்பு ஆகியவை வெளியிடப்பட உள்ளன. இவற்றை முதல்வர் பழனிசாமி வெளியிட உள்ளார்.