தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
கோவை தனியார் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, மதுரையிலிருந்து ஆம்புலன்ஸ் விமானத்தில் கோவை கொண்டு செல்லப்பட்டார் ஜெயஸ்ரீ.