சென்னை: அதிமுக அரசின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் ஊடகங்களுக்கு விளம்பரங்களைக் கொடுத்து, மக்களின் வரிப் பணத்தை அரசு வீணடிக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் மு.க.ஸ்டாலின். அப்போது அவர், அதிமுக அரசின் ஓராண்டு சாதனை என விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது குறித்து விமர்சனம் செய்தார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாமல் போனதற்குக் காரணம் திமுக.,தான் என்று அதிமுக.,வினர் கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றார் ஸ்டாலின்.
ஈரோட்டில் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ள திமுக மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.