மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மருத்துவர் என கூறும் பிசியோதெரப்பிஸ்ட்களுக்கு எதிராக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசியோதெரப்பிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் மருத்துவர் என குறிப்பிடுவதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தொடர்ந்த மனு மீது நீதிபதி கல்யாண சுந்தரம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.