ராம ரதத்தினை அடுத்து தமிழகத்தைக் கலக்கி வருகிறது வேல் ரதம். இது மார்ச் 25 ஞாயிற்றுக் கிழமை இன்று ஆறுபடை வீடுகளில் துவங்கி பழனியில் நிறைவடைய இருக்கிறது.
நாத்திக திராவிட அமைப்புகளின் பிடியில் இருந்து ஆத்திகம் வளர்த்த தமிழக மண்ணை மீட்டிடுக்கும் புனிதப் பணியை பலர் மேற்கொண்டு வருகின்றனர். இது ஆன்மிகம் தழைத்த, உலகுக்கே இந்து மதத்தை உணர்த்திய பூமி என்றும், இந்தியா முழுக்க பரவியிருக்கும் மதத் தத்துவங்களை அளித்த சங்கரரும், ராமானுஜரும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்த புண்ணிய பூமியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்துக்கள் இருப்பதாகவும், அதனால் இனி தமிழகம் நிறைய ரதங்களை காண இருக்கிறது என்றும் இந்த வேல் ரத விழா அமைப்பாளர்கள் கூறினர்.
சங்க கால இலக்கிங்களில் பத்துப் பாட்டு நூல்களில் முதன்மையான நக்கீரர் வழங்கிய முருகாற்றுப்படையில் போற்றப்பட்டுள்ள தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளான திருப்பெருங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய 6 இடங்களில் இருந்தும் வேல் ரதங்கள் புறப்பட்டு மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு இறுதியில் பழனியில் சங்கமிக்க இருக்கிறது.
வேல் ரத யாத்திரை மார்ச் 25 முதல் 29 வரை அறுபடை வீடுகளில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து சேரும் அன்று, அதாவது 29 ம் தேதி மாலை மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மறுநாள் காலை 8 மணி அளவில் மீனாட்சி கோவிலை வலம் வந்து பிறகு பழனியில் ஆறு ரதங்களும் சங்கமிக்கும்.
சைவம் வளர்த்த வைணவம் தழைத்த இந்த ஆன்மீக பூமியை நாத்திக திராவிட கூட்டங்களின் பிடியில் இருந்து மீட்க தமிழ்த்தாயின் மைந்தர்களான இந்துக்களே தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்து இந்த ரத யாத்திரைகள் துவங்கப் பட்டுள்ளன. ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கிளம்பிய எதிர்ப்பால், இந்த வேல் ரத யாத்திரைகள் முன்னிலும் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் நலன் வேண்டி ஹிந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பாக இந்த வேல் சங்கமம் ரத யாத்திரை நடத்தப் படுகிறது. ஆறு வேல்கள் மார்ச் 24-ஆம் தேதி பழனியில் பூஜிக்கப்பட்டு, மார்ச் 25-ஆம் தேதி ஆறுபடை வீடுகளில் இருந்தும் புறப்படும்.
யாத்திரையின் நிறைவாக மார்ச் 29-ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு மதுரையில் வேல் சங்கம மாநாடு நடைபெற உள்ளது. தங்கள் பகுதியில் பூஜையில் வைத்த வேலையும் அலங்கரித்து எடுத்து வர வேண்டுகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
வேல் சங்கமம் யாத்திரைக்கு தயாராகும் அறுபடை வீட்டின் ஆறு ரதங்கள்…
திருப்பரங்குன்றம் குமரவேல் ரதம்.
பழமுதிர்சோலை சோலைவேல் ரதம்..
பழனி மருதவேல் ரதம்..
திருச்செந்தூர் வீரவேல் ரதம்..
சுவாமிமலை ஞானவேல் ரதம்..
திருத்தணி தணிகைவேல் ரதம்..
தணிகைவேல் ரதயாத்திரை பாதை…
25ம் தேதி காலை புறப்படும் தணிகைவேலின் பாதை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
25/3/2019 – திருத்தணி, ராமஞ்சேரி, திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், பட்டாளம், நேதாஜிநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர்
26/3/2019 – காசிமேடு, காளிகாம்பாள் கோவில், திருவல்லிகேணி, அயோத்தியாகுப்பம், பட்டினப்பாக்கம், வேள்ச்சேரி, பம்மல், குமரன்குன்றம், தாம்பரம் சங்கராபள்ளி, வாலாஜாபாத், காஞ்சிபுரம்
27/3/2019 – செய்யார், திருவ்ண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருதாச்சாலம், கொழிஞ்சியப்பர் கோவில்
28/3/2019 – பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, திண்டுக்கல்
29/3/2019 – திண்டுக்கல் – வாடிப்பட்டி, மதுரை
30/3/2019 மதுரை-நிலக்கோட்டை-பழனி
(பாதை உத்தேசமானது…. சிறு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது)