புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை கிராமத்தில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தல் பிரசித்தி பெற்ற விஸ்வருப ஆஞ்சநேயர்கோயில் உள்ளது இக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து நடந்த தீபாரதனையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது முன்னதாக கோயிலில் உள்ள விநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.